Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத மருத்துவ பலன்கள் நிறைந்த சுரைக்காய்....!!

Webdunia
சுரைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளன. கை, கால்களில் குறிப்பாகப் பாதங்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்துக் கட்டினால் எரிச்சல் குணமாகும். 

சுரைக்காயின் சதைப்பகுதியோடு எலுமிச்சம்பழத்தின் சாற்றினையும் கலந்து தலையில் தேய்த்து குளித்துவந்தால், குளிர்ச்சி ஏற்படும்.
 
தினமும் சுரைக்காய் சாறு அருந்திவந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய எரிச்சல், பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுநோயினால் ஏற்படக்கூடிய எரிச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும். 
 
குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், சுரைக்காயுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம். உடலில் உள்ள தேவையற்ற நீர்ச்சத்துக்கள் நீங்கி எடை குறையும்.
 
சுரைக்காயை அரைத்து உடலில் பூசி வந்தால், உடலின் வெப்பநிலை குறைவதோடு குளிர்ச்சியும் ஏற்படும். சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில்  தடவிவர, கண் எரிச்சல் குணமாகும். 
 
வெயிலில் அதிகமாக அலைவதால் ஏற்படும் தலைவலி, ஒற்றை தலைவலி ஆகியவற்றுக்கு இந்த சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்து கட்டியும்,  அதனை அரைத்தும் பயன்படுத்தலாம். 
 
மெலனின் குறைப்பாட்டினால் ஏற்படும் அல்புனிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு (உடலில் ஆங்காங்கே வெள்ளையாக இருக்கும், சூரிய ஒளி பட்டால் எரிச்சல் ஏற்படும்)  சுரைக்காயை அரைத்துத் தேய்த்து வந்தால், எரிச்சல் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments