Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரைகள் எவற்றுக்கெல்லாம் நல்லது தெரியுமா...!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரைகள் எவற்றுக்கெல்லாம் நல்லது தெரியுமா...!
கோடைக் காலதில் உண்ண வேண்டிய கீரைகள்: வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக்கீரை, பசலைக் கீரை, கீழா நெல்லிக் கீரை,  கரிசலாங்கண்ணிக்கீரை, சக்கரவர்த்திக் கீரை, வல்லாரைக் கீரை, ஆராக்கீரை, அகத்திக்கீரை, இவற்ரைக் கூடியவரை பிப்ரவரி முதல் ஆகஸ்ட்  வரை சாப்பிடலாம்.
குளிகாலத்தில், மழைக்காலத்தில் சாப்பிடக்கூடிய கீரைகள்: தூதுவளைக்கீரை, புதினாக் கீரை, முசுமுசுக்கை கீரை, அரைக் கீரை, மூக்கிரட்டைக்  கீரை, சுக்காங்கீரை, இவற்றைப் புளி சேர்க்காமல் சமைப்பது நல்லது.
 
எல்லாக் காலங்களிலும் சாப்பிடக் கூடிய கீரைகள்: முருங்கைக் கீரை, புளிச்சக் கீரை, அரைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வல்லாரைக்  கீரை, ஆண்டு முழுதும் சாப்பிடலாம்.
 
குழந்தைகளுக்கு சிறுவர்களுக்கும் ஏற்ற கீரைகள்: மூக்கிரட்டை, முருங்கை, வல்லாரை, அரைக்கீரை, கற்பூரவல்லி, தூதுவளை இவற்ரை கேரட்,  துவரம் பருப்புடன் நெய், உருளைக் கிழங்கு சேர்த்து சமைத்து உண்ணக் கொடுக்கலாம்.
 
நரம்பு மண்டலத்துக்கு: நரம்பு மண்டலத்துக்கு ஏற்ற கீரைகள்: பொன்னாங்கன்னி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, முருங்கை ஆகியவை பலன்  தரும்.
 
தோலுக்கு: பருப்புக் கீரையும், சுக்காங்கீரையும் நல்ல மினுமினுப்பை தரும்.
 
மூட்டுக்களுக்கு: கறிவேப்பிலை, முடக்கத்தான், சண்டிக் கீரை. இந்த வைகை கீரைகள் அன்றாடம் உணவில் சேர்த்தால் மூட்டு சம்பந்தப் பட்ட  பிரச்சனைகள் குண்மாகும்.
 
இல்லற வாழ்வு சிறக்க: முருங்கைக் கீரை, அவரைக் கீரை, பசலைக் கீரை, தூதுவளைக் கீரை, புளிச்சக் கீரை, வல்லாரைக் கீரையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகா செய்வதன் மூலம் சில நோய்க்களுக்கு நிவாரணம் காணலாம்...!