Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களுக்கும் அற்புத நிவாரணம் தரும் மூலிகைகள் !!

பல்வேறு நோய்களுக்கும் அற்புத நிவாரணம் தரும் மூலிகைகள் !!
நத்தைச்சூரி: 10 கிராம் வேரைப் பசும்பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டி காலை, மாலை கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.


20 கிராம் வேரைச் சிதைத்து  குடிநீராக்கி 200 மி.லியாக நாளொன்றுக்கு 3 வேளை கொடுக்க உடம்பைப் பற்றிய எவ்வித நோயும் படிப்படியாகக் குறையும்.
 
நந்தியாவட்டை: கண் வலியுடையோர் இதன் பூக்களை கண்ணில் வைத்து ஒரு துணியால் இலகுவாகக் கட்டி உறங்கி வர கண் வலி, கண் எரிச்சல், கண் சிவப்பு மாறும். பூவால் ஒற்றடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கும். வேரை மென்று துப்ப பல்வலி நீங்கும்.
 
நல்வேளை/தைவேளை: இலைச்சாறு 1 துளி காதில் விட சீழ் வருதல் நிற்கும். இலையை அரைத்து பற்றுப் போட சீழ்பிடித்த கட்டிகள் உடைந்து ஆறும். இலைகளை அரைத்துச் சாறு பிழிந்து, சக்கையை தலையில் வைத்துக் கட்டி வர தலைபாரம் குணமாகும்.
 
நன்னாரி: பச்சை நன்னாரிவேர் - 5 கிராமை நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், நீர்ச்சுருக்கு ஆகியவைத் தீரும். 20 கிராம் வேரை அரை லிட்டர் நீரிலிட்டு 200 மி.லியாகக் காய்ச்சி காலை, மாலை சாப்பிட நாட்பட்ட வாதம், பாரிச வாதம் ஆகியவை தீரும். நன்னாரி மணப்பாகு  கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான பானம்.
 
நாகமல்லி: இலை அல்லது வேரை மென்று தின்ன பாம்புக்கடி நஞ்சு அகலும். இலை அல்லது வேரை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து பற்றுப் போட சொறி, கரப்பான் ஆகியவை தீரும்.
 
நாயுருவி: துத்திக் கீரையை வதக்கி, நாயுருவி விதை சூரணம் - 20 கிராமுடன் கலந்து உணவில் சேர்த்து உண்ண மூலம் அனைத்தும் தீரும். நாயுருவி வேரால் பல்துலக்கப் பல் தூய்மையாகும்.
 
நெல்லி: 10 கிராம் நெல்லிக்காயை இடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லியாகக் காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து, 40 மி.லி குடிநீரை 3 வேளை சாப்பிட பித்தம்  தணியும். இலையை நீரிலிட்டுக் காய்ச்சி வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்குமா பாலக்கீரை?