Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய் துர்நாற்றத்தை போக்க உதவும் சில எளிய குறிப்புகள் !!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:00 IST)
தினமும் ஒரு குறிப்பிட்ட இடைவேளியில் தேவையான அளவு தண்ணீர் குடித்து வந்தால், வாயில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களும் உணவுத் துகள்களும் சுத்தமாகிவிடும். இதுவே வாய் நாற்றத்திற்கு முதல் காரணமாக இருக்கின்றன.


தினமும் இரண்டு முறை காலை மற்றும் இரவு தூங்கும்முன் பல் துலக்குவது பல் இடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுகளையும், அழுக்குகளையும் பொருள்களை சுத்தப்படுத்த உதவும். இதனால் நாற்றம் ஏற்ப்படாது.

கிராம்பு அல்லது சீரகம் மென்று வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறுடன் நீர், சிறிது உப்பு கலந்து குடித்து வரலாம். இதில், வாய்கொப்புளித்தாலும் நாற்றம் நீங்கும்.

குடலில் ஏற்படும் பிரச்சனையால்தான் வாயில் நாற்றம் ஏற்படுகிறது. அதற்கு, தினமும் காலையில் 4 டம்ளர் தண்ணீர் வெறும் வயிற்றில் குடித்து வர வயிறு சுத்தப்படும், அல்சரும் நீங்கும், வாய் நாற்றமும் மாறும்.

தினமும் உணவு உண்ட பிறகு ஆப்பிள், கேரட் போன்ற காய்கறி மற்றும் பழ வகைகளை உண்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதோடு எச்சில் சுரப்பதையும் அதிகரிக்க செய்யும்.

கொத்தமல்லி கீரையை வாயில் போட்டு மென்றால் வாய் நாற்றம் மாறும். சிறிது லவங்க பட்டையை நீரில் காய்ச்சி மிதமான சூட்டில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments