ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும். சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள். உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுத்து சாப்பிடப் பழக்க வேண்டும்.
உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை. ’தினம் ஒரு முட்டை’ உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.
முட்டையின் வெள்ளை கருவில் இருந்து தான் புரதச்சத்து அதிகமாக வருகிறது. அதனால் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் உட்கொண்டால், புரதச்சத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
வெள்ளை கருவை விட அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் அடங்கியுள்ளது. அதை நம்மில் பலரும் உணருவதில்லை. ஒரு மஞ்சள் கருவில் பி6, ஃபோலேட், பி வைட்டமின், பி12, ஏ, டி, ஈ மற்றும் கே வைட்டமின்கள் அடங்கியுள்ளது.
முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை தான். ஆனால் அதில் வைட்டமின்களும், கனிமங்களும் கூட அடங்கியுள்ளது. இது உங்கள் உடல் செயற்பாட்டிற்கு தேவைப்படும் முக்கியமானவையாகும்.
முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே பிட்னஸ் பயிற்சியை மேற்கொள்பவர்கள் அடுக்கடுக்காக முட்டைகளை உடைத்துக் குடிக்கிறார்கள்.
கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். பொதுவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை சாப்பிடலாம்.