Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நாம் வாங்கிய தேன் சுத்தமானதுதானா எப்படி தெரிந்துக்கொள்வது...?

நாம் வாங்கிய தேன் சுத்தமானதுதானா எப்படி தெரிந்துக்கொள்வது...?
, திங்கள், 12 செப்டம்பர் 2022 (14:40 IST)
தேனில் உள்ள கலப்படத்தை எப்படி கண்டறிவது என பார்ப்போம். சிறிதளவு தேனை உங்கள் விரல்களில் எடுத்து தேய்த்து பாருங்கள். உண்மையான தேன் எளிதில் சருமத்தில் உறிஞ்சப்படும். ஒருவேளை உங்கள் கையில் தேன் மீதம் இருந்தால், அது உண்மையான தேன் இல்லை என்பதை அறியலாம்.


சோதனை முறை 1: கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் சுத்தமான தேன் என்று அறிந்துகொள்ளலாம்.. ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

webdunia

சோதனை முறை 2 : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது. எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க இந்த முறைகளையும் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும். ஒரு நிமிடம் காத்திருக்கவும். பிறகு தேனை வாயால் ஊதவும். தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம். மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி தேன் என கண்டறியலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோட்டத்தில் வளரும் சில வகை மூலிகைகளை எவ்வாறு பயன்படுவது...?