Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நோய்களுக்கு தீர்வு தரும் கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது...?

நோய்களுக்கு தீர்வு தரும் கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது...?
கற்றாழைச் செடியானது வறண்ட நிலத்திலும் வளரும் தன்மைக் கொண்டுள்ளது. கற்றாழைச் செடியில் உள்ள ஓர் இலையினை மட்டும் வெட்டி வைப்பதன் மூலம் அதில் இருந்து மஞ்சள் நிற அமிலம் வெளியேறும். அதனை முழுவதுமாக நீக்கியப் பின்பு நீரில் நன்றாகக் கழுவி பின் உலர வைக்க வேண்டும். 

பின், மேலே உள்ள பச்சை நிறத் தோலினை மட்டும் நீக்கி உள்ளே உள்ள கண்ணாடிப் போன்ற ஜெல்லினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கத்தி அல்லது தேக்கரண்டி மூலம் எளிதில் எடுத்துக் கொள்ளலாம். அந்த கற்றாழை ஜெல்லினை பிரிட்ஜ்ஜில் வைத்து பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜெல்லினை  மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மைகளையும் கொண்டுள்ளது. கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது நேரடியாக புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது.
 
மூலப் பிரச்சனைகளுக்கு கற்றாழை அருமருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக வயது முதிர்வு காரணமாக ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு கற்றாழையில் உள்ள குறிப்பிட்ட அமிலத் தன்மையானது சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
மலச்சிக்கலினால் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கற்றாழை ஜெல்லினை ஆசனவாயிலில் ஏற்படும் கொப்புளங்களில் தடவுவதன் மூலம் மூலப்பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 
 
குறிப்பாக இதுபோன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கற்றாழையை பயன்படுத்தி வந்தால் பிரச்சனைகளில் இருந்து வெகுவாக விடுபடலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளவர்கள், மற்றும் நீரழிவு நோயாளிகள் மருந்துவரின் ஆலோசனைப் படி பயன்படுத்தலாம்.
 
விளைவுகள்: இரைப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கற்றாழை ஜெல்லினைத் தவிர்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிதில் கிடைக்கும் செம்பருத்தி பூவில் உள்ள மருத்துவகுணங்கள் !!