கானா வாழை காய்ச்சலைப் போக்கக் கூடிய ஓர் அற்புத மூலிகை, இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. சிறுநீர் பெருக்கியாகவும் உடலினுள் தேங்கிக் கிடக்கும் உப்புச்சத்தை வெளியேற்றும் துப்புரவுப் பணியாளனாகவும் பயன்படுகிறது.
சிறுநீரகப் பைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல், நுரையீரல் இரையறை ஆகியவற்றுக்கு பலம் தருவதோடு, அவற்றின் கோளாறுகளை சீர் செய்வதாகவும் விளங்குகிறது.
தொழு நோய்கள் உட்பட பல சரும நோய்களுக்கு சிறந்த மருந்துதாகிறது. கால்களில் நீர் தேங்கி வீக்கமும் வலியும் செய்கிற வாத நோயில் கானா வாழை கை வந்த மருந்தாக நோயைத் தணிக்கிறது.
கானா வாழையை கீரையாக உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் கானா வாழைச்சாற்றை மேலுக்கு பூசி வைப்பதாலும் வீக்கமும் வலியும் கரைந்து போகும்.
கானா வாழையை வாந்தியுண்டாக்கியாகவும், மாதவிலக்குத் தூண்டியாகவும் நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியதாகவும், காய்ச்சல் தணிப்பானாகவும், ரத்தத்தை உறைய வைக்கும் தன்மையும் கொண்டது.
கானா வாழை இலையுடன் சம அளவுக்கு கீழா நெல்லியை புதிய தயிரில் கலந்து தினம் மூன்று வேளை உள்ளுக்குக் கொடுப்பதால் பெண்களின் வெள்ளைப் போக்கு விரைவில் குணமாகும்.
கானா வாழை இலையை கசக்கிச் சாறு பிழிந்து அதனோடு சிறிது மஞ்சள் சேர்த்து முகப்பருக்களின் மேல் பூசி வர விரைவில் பருக்கள் உடைந்து காயம் ஆறிப் போகும். கானா வாழை அடிக்கடி உண்டு வந்தால் புற்றுநோய் நெறிக்கட்டி நோய் தடுக்கப்படும்.