Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பல்வேறு மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவள்ளி இலைகள் !!

பல்வேறு மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவள்ளி இலைகள் !!
ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினமும் கற்பூரவள்ளி செடியின் இலைசாற்றை பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றோடு கலந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு நீங்கும்.

கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ்  தொந்தரவுகள் நீங்கும். அந்த இல்லை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
 
தோலில் சில நுண்கிருமி தொற்றால் படை, சொறி, அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நனவு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
 
கற்பூரவள்ளி செடிகளின் இலைகளின் வாசத்தை அடிக்கடி சுவாசிப்பவர்களுக்கு, அந்த இலைகளில் இருக்கும் ரசாயன பொருட்கள் நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், படபடப்பு தன்மை போன்றவற்றை போக்குகிறது.
 
கற்பூரவள்ளி செடிகளின் இலைகள் சிறுநீரை அதிகம் பெருக்கும் தன்மை கொண்டது. இது சிறுநீரகங்களில் அதிகளவில் சேரும் உப்புகளை கரைத்து சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!