வளரும் குழந்தைகளுக்கு கருப்பு உளுந்து சேர்த்த உணவுகளைக் கொடுப்பது மிகவும் நல்லது.
முக்கியமாக படிக்கும் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு முறையாவது கருப்பு உளுந்து களி அல்லது கருப்பு உளுந்து கஞ்சி செய்து சாப்பிட கொடுத்தால் எலும்புகள் தசைகள் வலிமை பெறும் எவ்வளவு நேரம் எழுதினாலும் தொய்வில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
உயரமாக வளரவும் இந்த கருப்பு உளுந்து முக்கிய பங்கு இருப்பதோடு எலும்புகளும் வலுப்பெறும் அடுத்து பெண்களைப் பொறுத்தவரையில் அதி காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஏதாவது வேலை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள் இவர்களுக்கு எலும்பு மற்றும் தசை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்
அதிலும் நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை இவர்கள் அடிக்கடி உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
அதே போன்று இன்றளவும் பூப்பெய்திய பெண்களுக்கு கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்த உளுந்துகளி நல்லெண்ணெய் நாட்டுக்கோழி முட்டை கொடுப்பார்கள் இந்த உணவு முறையால் அந்தப் பெண்ணின் கருப்பை பலம் அடைவதோடு எலும்புகளும் வலுவடையும் முக்கியமாக சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் இந்த கருப்பு உளுந்து மிகவும் உதவும் முக்கியமானது
ஆண் மலட்டுத்தன்மை சில ஆண்களுக்கு உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது இவர்களுக்கு கருப்பு உளுந்து சிறந்த உணவாகும் எனவே உளுந்துக் களியை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்
உளுந்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை உடலில் சேர்த்து ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சரியான விகிதத்தில் வைத்து நீரிழிவு பாதிப்பு கடுமையாக ஆகாமல் காக்கின்றது.