Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை மிக சீக்கிரத்தில் குறைக்க உதவும் எலுமிச்சை புல் !!

Webdunia
எலுமிச்சை புல் அதிக மருத்துவ குணம் கொண்டது. இவற்றில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிக அளவில் உள்ளன. இந்த புல்லை டீ போன்று தயாரித்து குடித்தால் நோய்கள் அனைத்தும் பறந்து போய் விடும்.

எலுமிச்சைப் புல்லில் பல மருத்துவ குணங்கள் உண்டு. இதனால் இதனை மக்கள் பொதுவாக உட்கொள்வது வழக்கம். புற்கள் அல்லது புல்வெளி என்பது பொதுவாக  கால்நடைகளுக்கு உணவு அளித்து வருகின்றது.
 
எலுமிச்சைப்புல் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்னமின்மையை குறைக்கவல்லது என்பதை கண்டறிந்துளார்கள். இந்த எலுமிச்சை புல் டீயை தயாரிக்க, முதலில் இந்த புல்லை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி  கொள்ளவும். இதனை வடிகட்டி குடித்து வந்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்தும் கிடைக்கும்.
 
இந்த எலுமிச்சை புல் ஒருவித ஆயுர்வேதமாகவே கருதப்படுகிறது. இந்த புல்லின் மருத்துவ தன்மை அதிக ஆற்றல் வாய்ந்தது. உடல் முழுக்க உள்ள  கழுவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்ற இந்த டீ பெரும்பாலும் உதவும். இது எலுமிச்சையை போன்ற மணமும் கொண்டது.
 
இந்த புல்லில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், ரத்தத்தில் சேர்ந்துள்ள  கொலஸ்ட்ராலையும் முழுவதுமாக குறைக்கவும் இந்த டீ பயன்படுகிறது. எனவே உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
 
பலருக்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்றுகிறது இந்த டீ.  குறைந்த கலோரிகள் இதில் இருப்பதால், உடல் எடையை மிக சீக்கிரத்திலே இது குறைத்து விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments