Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை...!!

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை...!!
தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.


எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
 
உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி,  வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.
 
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்ட‌ழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்தி‌ரி குணத்தை உடையது எலுமிச்சை.
 
எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை  ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும்.
 
சர்ம நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சக்காமாலையை நீக்கும்,  வீக்கத்தை குறைக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றிக்கு உதவும், யானைக்கால் வியாதியை குணப்படுத்தும்.
 
எலுமிச்சம் பழம் நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்து உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும்  எலுமிச்சை தடுக்கிறது.
 
விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சப் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிட்டால் உடனடி தெம்பு ஏற்படும். 
 
உண்ணாவிரம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு உண்டால் அஜீரணப் பிரச்சனைகள் நேர்வதைத்  தடுக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 லட்சத்தை நெருங்கியது இந்தியா! – மாநிலவாரி நிலவரம்!