புதினாக் கீரையில் உயிர்ச் சத்துகளும், இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும் ஏராளமாக இருப்பதுதான் இதன் சிறப்பு.
புதினா கீரையை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு நல்ல மருந்தாக இருந்து வருகிறது.
புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.
புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.
தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.
புதினா கீரை பலவித பிணிகளை அகற்றும் அற்புத குணமுடையது. இதனை உட்கொள்வதின் மூலம் நல்ல இரத்தத்தை உற்பத்தி செய்து நோய் எதிர்ப்பு சக்திபெற்று வாழமுடியும்.
புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும்.