Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழைக்காயின் மருத்துவ குணங்களில் சிலவற்றை பார்ப்போம் !!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (10:28 IST)
வாழை மரத்தின் இலைகள், பூக்கள், தண்டுகள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் வாழை மரம் தோட்டங்களில் மட்டுமல்லாது பெரும்பாலான வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.


வழைக்காயில் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை எலும்புகளுக்கு போதிய வலிமை தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது. வாழைக்காயில் விட்டமின் ஏ, சி, பி6 ஆகியவை அதிக அளவு உள்ளன.

வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதசத்து,  நார்ச்சத்து போன்றவையும் உள்ளன.

வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்றவை அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்சானது கரையாத நார்ச்சத்தாக செயல் பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் மூலம் வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காயை உணவுடன் எடுத்து கொண்டால் நூறு வயது வரை நோயின்றி வாழலாம்.

வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து, மற்றும்  மாவுச்சத்தும் உள்ளது.

வாழைக்காய் சாப்பிட்டால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும். வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை குறையும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்கிறது.

வாழைக்காய் ரத்த செல்களில் உள்ள குளுகோஸ் உறிஞ்சுவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments