Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதாக கிடைக்கும் முட்டைகோஸில் உள்ள ஏராளமான சத்துக்கள் !!

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (09:52 IST)
முட்டைகோஸில் வைட்டமின் கே மற்றும் சி ஆகியவை உடலில் இருக்கக்கூடிய கிருமிகளுக்கு எதிராக போராடும்.


முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியன்ஸ் மற்றும் வைட்டமின்களான ஏ, சி, கே போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவற்றை தடுக்கும்.

சிலிகான், சல்பர் சத்துக்கள் , வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, இ, சி, கே, கால்சியம், ஐயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற மினரல்ஸ் முட்டைக்கோஸில் இடம் பெற்றுள்ளன.

முட்டைக்கோஸில் புற்று நோயை எதிர்த்து போராடும் சத்துகள் உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால் புற்று நோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கலாம்.

முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் சி, சல்பர் ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படுகிறது. முட்டைக்கோஸில் உள்ள "இண்டோல் 3 கார்பனைல்" என்ற சத்து, கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரில் உங்கள் கூந்தலை அலசுவதால் அது தலைமுடிக்கு நன்மைகளை கொடுக்கிறது. முட்டைகோஸ் தண்ணீரில் சல்ஃபர் இருக்கும். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments