கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற தன்மைகளும் நிறைந்துள்ளது.
எளிதாக கிடைக்கக்கூடிய, அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்து காணப்படுகிறது.
வயிற்றுப் போக்கினால் அவதிப்படுபவர்கள் 30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.
கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து, பின் அதை 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கலாம்.
எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வர தீராத வயிற்று வலி காணாமல் போய்விடும்.
கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை குறைவதை நீங்கள் காணலாம்.
கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும், வாயில் ஏற்படும் பல்வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது.
மூக்கு அழற்சியால் தினமும் கஷ்டப்பட்டு வந்தால், கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வர வேண்டும். செரிமான பிரச்சனை உள்ளவர்கள், கொய்யா இலையின் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பக்டீரியாக்களை அழித்து, செரிமானம் நடைபெறும்.
கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது. கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், உதிரப்போக்கு தடைப்படும், மேலும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.