பப்பாளியில் நார்சத்து, கார்பஹைட்ரேட், சர்க்கரை, இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம் கால்சியம் மற்றும் பொட்டாசியம், மக்னீசியம் உள்ளது.
பப்பாளி பழம் ஆண்டு முழுவதும் எளிதாக கிடைக்க கூடிய பழங்களில் ஒன்றாகும். பப்பாளி பழத்தில் செரிமான பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
பப்பாளியில் உள்ள பாப்பேன் என்கிற நொதி புரதங்களை உடைப்பதின் மூலம் செரிமானத்தை எளிதாக்குகின்றது. உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் அல்லது உணவு சாப்பிட்ட பின்பு பப்பாளி பழம் சாப்பிடுவது சீரான செரிமானத்திற்கு உதவும்.
பப்பாளியில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் பசியை குறைத்து நீண்ட நேரம் செயலாற்ற உதவுகிறது.
பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி, நார்சத்து பொட்டாசியம் ஆகியவை இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. கொழுப்பை குறைத்து இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.
பப்பாளி பழத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கும் "லைகோபீன்" என்கிற ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. இது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினமும் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது மூலம் கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.