பூசணியின் விதைகளை எடுத்து அதனை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தை கொடுக்கிறது.
தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர அன்றைய நாள் முழுதும் தேவையான மெக்னீசியம் கிடைத்துவிடும்.
பூசணி விதைகள் நம் உடலிலுள்ள இரத்த சர்க்கரையின் அளவை சரியான அளவில் பராமரித்து, நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. எனவே சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க நினைப்பவர்கள் பூசணி விதைகளை சாப்பிடலாம்.
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகவும், உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் இருந்தால், இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இவர்கள் பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இருதயத்துக்கு நல்ல வலிமையை கொடுப்பதோடு மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும். இரண்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிகப்படியான துத்தநாகச் சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது
பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இதனால் முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை தடுக்கிறது.