Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சிறுநீரக உறுப்புகளை சீராக்கும் கோவைக்காயின் மருத்துவ குணங்கள் !!

சிறுநீரக உறுப்புகளை சீராக்கும் கோவைக்காயின் மருத்துவ குணங்கள் !!
கோவைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. புற்று நோய் வராமல் இருக்க உணவில் அடிக்கடி கோவைக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

கோவைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக இருந்து வருகிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் வெளியேறி கல்லீரல் வீக்கம் குறைகிறது.
 
இரும்புச்சத்து, பொட்டாசியம், போன்ற தாதுக்கள் கோவைக்காயில் அதிகமாக இருக்கிறது. இவை எலும்பு வளர்ச்சி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கோவைக்காய் நல்ல மருந்தாக இருந்து வருகிறது.
 
இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு செல்லவும், இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வரவும், கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்களையும் தவிர்க்கிறது.
 
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். மேலும் சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறுவதை தடுக்கிறது.
 
உடலில் செரிமான அமிலங்கள் குறைவதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே வாரத்திற்கு இருமுறை கோவக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை நீங்கும்.
 
கொழுப்பை கரைக்கக்கூடிய கோவைக்காய் அனைத்து உணவுகளிலும் அதிகம் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு நல்ல பலன் தரும்.  மேலும் சிறுநீரகத்தில் உள்ள கற்களை வெளியேற்றுகிறது. தொடர்ந்து கோவைக்காய் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக உறுப்புகள் மற்றும் உடல் அனைத்தும்  ஆரோக்கியமாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடல்புண்களை விரைவில் குணமாக்கும் முளைக்கீரை...!!