மசாலா பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என அனைவருக்குமே தெரியும். அதிலும் கிராம்பில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பது சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
பல் வலி என்றால் உடனே ஒரு கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும் என்று சொல்வார்கள். கிராம்புவில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்,
புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், நியாசின், ஃபோலேட், வைட்டமின் சி, பி, ஈ, கே மற்றும் டி போன்றவை நிறைந்துள்ளது.
கிராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். மேலும் இது வாய்வு தொல்லை, வயிற்று எரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவற்றையும் சரிசெய்யும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லாதது போல் இருந்தால், கிராம்பை பொடி செய்தோ அல்லது வறுத்தோ தேனுடன் கலந்து உட்கொள்ள உடனே சரியாகும்.
கிராம்பில் உள்ள கூட்டுப்பொருளான பினைல்புரப்போனைடு பொருட்கள் ஆன்டி மியூட்டோஜெனிக் தன்மையை கொண்டுள்ளன. இது செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.
நுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.
உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில் கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் அதிகம் எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை. உங்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பது இவர்களுடைய முக்கிய வேலையாகும். இது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது. எனவே கிராம்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை காக்கிறது.