Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்மையை அதிகரிக்க உதவும் மருத்துவகுணம் நிறைந்த அத்திப்பழம் !!

Webdunia
அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். 

வைத்தியம் 1:
 
பேரிச்சம்பழம் - தேன் கலவைமற்றும் அத்திப்பழம் - தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்.
 
தேவையான பொருட்கள்: பேரிச்சம்பழம் - அரைக்கிலோ (விதை நீக்கியது), சுத்தமான தேன் - அரைக்கிலோ, குங்குமப்பூ.
 
செய்முறை: ஒரு அகண்ட பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக்கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ  வேண்டும். இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊற வைக்கவேண்டும். ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு  வைத்துக் கொள்ளுங்கள். இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு  உறங்குங்கள்.
 
வைத்தியம் 2:
 
தேவையான பொருட்கள்: அத்திப்பழம் - அரைக்கிலோ, சுத்தமான தேன் - அரைக்கிலோ, குங்குமப்பூ.
 
செய்முறை: தேன் கலவை சாப்பிட்டு முடித்த பிறகு தான், அத்திப்பழம் - தேன் கலவை உட்கொள்ள வேண்டும். அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும். அதை காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு  வைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்து இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள்.
 
இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருக வெகுவாக உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments