Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சளியை விரட்டும் சுக்குமல்லி தேனீர்..!

Webdunia
இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத்  தொல்லையை போக்கக்கூடியது.
சாப்பாடு, தூக்கமின்மை, அதிக உடல் உழைப்பு போன்ற காரணங்களால் சிலருக்கு திடீரென வாய்வுப்பிடிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு நெஞ்சுப்பகுதியை  உள்ளுக்குள் அழுத்துவது போன்ற உணர்வு, புளியேப்பம் ஏற்படும். அந்தச் சமயங்களில் அரை ஸ்பூன் சுக்குமல்லி தேனீர் குடித்தால் உடனடி நிவாரணம்  பெறலாம்.
 
சிறுவர் முதல் பெரியவர் வரை சுக்குமல்லி தேனீர் குடித்துவந்தால் வயிற்றுக்கோளாறுகள் வராமல் இருக்கும் என்பதோடு முதுமையை தள்ளிப்போடலாம்.
 
தேவையான பொருட்கள்: சுக்கு - 1/2 கப், மல்லி - 1/4 கப், மிளகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன். தண்ணீர் - 2 கப், சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு - தேவையான அளவு. 
செய்முறை: 
 
முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து மிக்ஸியில்  போட்டு பொடி செய்து கொள்ளவேண்டும். 
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை  சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி தேனீர் தயார். பனங்கற்கண்டுக்கு பதிலாக தேன் அல்லது கருப்பட்டியும் சேர்த்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments