Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகும் முருங்கைக்கீரை !!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (09:24 IST)
முருங்கைக்கீரை: வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.


முருங்கைக்கீரையில் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றது.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டியாகும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைக்கீரை மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக்கீரையை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்கீரை சூப் மூட்டு வலியையும் போக்க வல்லது. கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவித்து பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைக்கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments