பொதுவாக குளிர் காலத்தில் பனியின் கரணமாக அனைவரின் முகமும் வறண்டு விடும். இந்த நிலையை மாற்றி உங்கள் முகம் பட்டுபோல் மின்ன உதவும் ஐந்து ஃபேஷியல் முறைகள்.
* பாதாம் ஃபேஷியல்: பாதாம் பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முகத்தில் பூசி வந்தால், நீங்கள் பியூட்டி பார்லருக்கு போக வேண்டியதே இல்லை
* மஞ்சள் ஃபேஷியல்: மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றினால் உங்கள் சருமம் அடைந்திருக்கும் அழகான மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
* தேன் ஃபேஷியல்: 1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வைத்தால் வறண்ட சருமம் மிருதுவாக மாறும்
* ஓட்ஸ் ஃபேஷியல்: ஓட்ஸ், தயிர் , தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில் உங்களின் சரும நிறம் பொலிவடைந்திருப்பதை உணரலாம்.
* எலுமிச்சை ஃபேஷியல்: 1/2 கப் பாதாம் எண்ணெய் இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும் முகத்தை நன்றாக கழுவி, காய்ந்தவுடன் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தடவவும். நன்றாக தேய்த்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.