Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இளமையாக வைத்திருக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

இளமையாக வைத்திருக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!
மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும். கரிசலாங்கண்ணிக்கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள், தேமல்  போன்றவற்றைப் போக்கி, மூப்பைக் குறைக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு!
 
ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக்காய் அல்லது கனியைக் கண்டிப்பாக சேர்க்கவேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச்  சாப்பிடுவது கூடுதல் நலம்.
 
நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.  வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.
 
அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு  வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
 
வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்கவைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
 
சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக்கீரை கண்களைப்  பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.
 
நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறுதுண்டு இஞ்சியை எடுத்துக்கொள்வது உடல்  ஆரோக்கியத்தை காக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூந்தலை பாதிக்கும் பொடுகு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் !!