Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
தக்காளி சாஸ் செய்யும் போது, அதில் ஐந்து பல் வெள்ளை பூண்டையும் மைபோல் அரைத்து சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும். அஜீரணம் வராமல்  காக்கும்.

மாதுளம் பிஞ்சை தயிருடன் சேர்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும்.
 
கசகசாவுடன் சிறிது கருப்பட்டி நாலு கிராம்பு சேர்த்து பொடித்து 3 வேளை சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.
 
தேங்காய் வழுக்கையுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச் சூடு தணியும்.
 
வெந்தயத்துடன் நான்கு கிராம்புகளை வைத்து, சிறிது நீர் தெளித்து, மை போல அரைத்து, தலையில் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளித்தால், பொடுகு தொல்லை ஈர்கள் அழியும்.
 
ஆரஞ்சு பழத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொண்டால் குடலில் தீமை செய்யும் பூச்சிகள் உண்டாகாது.
 
வெள்ளைப் பூண்டுடன் சிறிது துளசி சாறு சேர்த்து அரைத்து தேமல் மேல் பூசி வந்தால் தேமல் மறையும்.
 
வெங்காய ரசத்தையும் எலுமிச்ச பழ ரசத்தையும் சம அளவில் கலந்து காலரா நோயாளிகளுக்கு கொடுத்து வந்தால், வாந்தி பேதி நின்றுவிடும்.
 
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.
 
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments