Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையான முறையில் முகத்தை அழகாக்கும் குறிப்புகள்...!!

Webdunia
அனைவருக்குமே அழகாகவும், வெள்ளையாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்குவதை விட இயற்கையான முறைகளை பின்பற்றினாலே அழகாக மாறலாம்.
பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகேடோ போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை. எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு சருமத்திற்கு தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமை  யாக வைத்திருக்கும்.
 
எல்லா காய்கறிகளையும் சேர்த்து சூப் செய்யும்போது, அதிலிருந்து வெளியேறும் ஆவியில் முகத்தை காட்டினால், சருமத் துவாரங்கள் திறந்து  அழுக்கு வெளியேறும். தேவையான சத்துகளும் சேரும்.
 
சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப் பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண்ணெய் போன்றவற்றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்க மாகும்.
 
பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் சாப்ட்டாகும். இந்த பேக் முகத்தில்  உள்ள ஈரப்பசையையும் தக்க வைக்கும்.
 
பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசிவந்தால், நிறம் கூடுதலாகும். நார்மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய வேண்டும்.
 
முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால் முகம் பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம்  நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.
 
முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை  மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும்.
 
எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத் தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments