Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள வேப்பம்பூ !!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (09:21 IST)
கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும் மற்றும் கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளையும் வேப்பம்பூ கட்டுப்படுத்துகிறது.


வெயிலினால் ஏற்படும் நாவறட்சி, அரிப்பு, தோல் வியாதி, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

வேப்பம் பூவை மென்று தின்றால் வாயுத்தொல்லை, அதிகமாக ஏப்பம் வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வேப்பம் பூவை ஊற வைத்து அந்த நீரை பருகுவதால் அல்லது அந்த நீரால் வாயை கொப்பளிப்பதால் நாக்கில் ஏற்படும் பூஞ்சை தொற்று சரி ஆகிவிடும். மேலும் இது அல்சருக்கும் அருமருந்து.

வேப்பம்பூவை தொடர்ந்து சிறிதளவு உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

உடலில் உள்ள தேவையற்ற காற்றை வேப்பம்பூ வெளியேற்றுகிறது. அதனால் தானாகவே ரத்த அழுத்தம் குறையும். அதேபோல் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் இருக்க இது உதவும்.

வெயிலில் காயவைத்துப் பொடி செய்த வேப்பம் பூவை, பருப்புப் பொடியுடன் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம் போன்ற பிரச்சனைகள் வராது.

உஷ்ண உடம்பு கொண்டவர்கள் வேப்பம் பூவை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இது உடல் சூட்டை அதிகரித்துவிடும். அதேபோல் வயிற்றுப்போக்கு, மூல நோய் மற்றும் அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டால் போதும்.

வேப்பம் பூவை துவையலாகவோ, ரசமாகவோ அல்லது குழம்பாகவோ செய்து சாப்பிடலாம். இப்படி செய்து சாப்பிட்டால் கசப்புத் தன்மை குறைவாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments