Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் !!

Webdunia
ஊமத்தை காரத்தன்மையும், கைப்புச் சுவையும் கொண்ட தாவரம். வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக் குறைக்கும்.

ஊமத்தை தூக்கத்தைத் தூண்டும். வாத நோய்களைக் கட்டுப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தும். வெளிப் பூச்சுத் தைலங்களில் இது சேர்க்கப்படுகின்றது. ஊமத்தை ஒரு மீட்டர் வரை உயரமாக வளரும் செடி வகையைச் சார்ந்த‌து.
 
ஊமத்தை அகன்ற பசுமையான இலைகள், நீள்வட்ட வடிவில் காணப்படும். வாயகன்று, நீண்ட குழலுள்ள புனல்போன்ற அமைப்பில் வெள்ளை நிறமான மலர்கள் காணப்படும். ஊமத்தை காய் உருண்டையாகவும் பசுமையான முட்கள் அடர்ந்ததாகவும் இருக்கும். இலை, பூ, காய் விதை ஆகியவை மருத்துவப் பயன்  கொண்டவை. 
 
ஊமத்தை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் விளைகின்றது. உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு. 
 
இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து வெளியிடுவதால் சுவாச காசநோய் குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு செய்யலாம். 
 
ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிட‌ கீல்வாயு குணமாகும். தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு ஊமத்தை இலையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.
 
வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட வேண்டும்.
 
பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள்  குறையும். முடி வளரத் தொடங்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments