Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் தரும் நுணா !!

Webdunia
நுணாக்காயையும், உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாக நாளும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும் பல் வலி, பல்லரணை, வீக்கம், குருதிக் கசிவு ஆகிய நோய்கள் தீரும். சிறந்த பற்பொடியாகும்.

நுணா வேரையையும், காஷாயமிட்டுக் குடிக்கச் சுகப்பேதியாகும். கெடுதலில்லாமல் மலர்ச்சிக்கல் தீரும்.
 
ஒரு கிலோ நுணாப் பட்டையை இடித்து நான்கு படி நீரில் போட்டு அரைப்படியாகச் சுண்டக் காய்ச்சவும். இத்துடன் அரைப்படி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இந்தக் கலவையில் ஒரு லிட்டர் எள் நெய் சேர்த்துச் சுண்டக் காயச்சி வடித்து வைக்கவும். இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசி,  தலைக்கும் தேய்த்து அரைமணி நேரம் சென்று குளித்து வரவும். உடலில் தோன்றும் கழலைக் கட்டிகள், அரையாப்பு கட்டிகள் மேகப்புண் ஆகியன குணமாகும்.  முறைசுரம், பித்தகுன்மம், படை நோய்களும் குணமாகும்.
 
மரப்பட்டையை நசுக்கி, வெந்நீரில் போட்டு கொதிக்க வைக்க, மஞ்சள் நிறமான சாயம் நீரில் கரையும். இந்த சாயத்தால் துணிகளுக்கு நிறமேற்றம் செயல் இருந்து வந்துள்ளது குறிப்படத்தக்கது.
 
இன்று, கடைகளில் விற்கப்படும் ‘நோனி’ என்ற நுணா சர்பத்- பல்லாயிரக்கணக்கானவர்களால் விரும்பிப் பருகப்படுகிறது. அதாவது, நுணாப்பழத்தில் இருந்து   தயாரிக்கப்படும் இது, காலரா, டைபாய்டு, காமாலை, தைராய்டு, உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்றவற்றைக் குணமாக்குவதாக ஆய்வுகள்   சொல்கின்றன.
 
புண்கள், சிரங்குகள் குணமாக நுணா இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். பேதியாக 10 கிராம் நுணா வேரை நசுக்கி ½ லிட்டர் நீரில் போட்டு  ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
 
பல் சொத்தை குணமாக முதிர்ந்த நுணா காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊறவைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக்  கொள்ளவேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வரவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments