Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திராட்சையில் உள்ள சத்துக்கள் இத்தனை பயன்களை கொண்டதா....!!

திராட்சையில் உள்ள சத்துக்கள் இத்தனை பயன்களை கொண்டதா....!!
திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கருப்பு, சிவப்பு, மற்றும் பச்சை நிறம் என நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகளுமே உள்ளன. மூன்று வகை திராட்சைகளுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை. 
கருப்பு திராட்சை யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரககங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து, சிறுநீரகங்களின்  ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 
தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக  இருக்கும்.
 
கருப்பு திராட்சையை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கருப்பு திராட்சை வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து, உண்ணும் உணவுகள் எளிதில்  செரிமானமாக உதவும்
 
ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். சரும செல்களை  ஆரோக்கியமாக பாதுகாத்து, முதுமைத் தோற்றம், வறட்சியான சருமம், வறண்டுபோன சருமம், இவற்றை மென்மையாக்க உதவுகிறது.

webdunia

 
மார்பக புற்றுநோய் மற்றும் இதர வகை புற்றுநோய்களையும் எதிர்த்து போராடி புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. அடிக்கடி மலச்சிக்கல்  ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவுகிறது.
 
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், அது ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். மேலும் கருப்பு திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது.
 
தலைமுடி அதிகமாக உதிர்வதை தடுக்க, கருப்பு திராட்சை நல்ல தீர்வளிக்கும். அதற்கு கருப்பு திராட்சையை சாப்பிட்ட பின்பு, அதன் விதைகளை தூக்கி எறியாமல் அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.  இதனால் கருப்பு திராட்சையில் உள்ள லிவோலியிக் அமிலம் மயிர்கால்களை வலிமைப்படுத்துவதோடு, முடியின் வேர்ப்பகுதியில் இருந்து  முடியை வலிமையாக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை போக்கும் இயற்கை ஃபேஷியல் முறைகள்...!