Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நீக்கும் ஓமப்பொடி !!

Webdunia
ஓமத்தில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. சாதாரண ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும். ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம்  இடம்பெறுகிறது.

ஓமத்தில் கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபிளோவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.
 
வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான உணவு முறையை பின்பற்றததால் வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

மேற்கண்ட பிரச்சனை உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க  வைத்து அது பாதியாக சுண்டியவுடன் வடிகட்டி அருந்தினால் மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.
 
ஓமம், மற்றும் மிளகு இரண்டையும் தலா 35 கிராம் எடுத்து, இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என  இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
 
தினமும் தவறாமல் ஓம தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் அண்டாது என்று கூறப்படுகிறது.
 
வயிற்றில் கோளாறு இருந்தாலோ, வயிற்றில் அடிக்கடி சத்தம் வந்தாலோ, ஓமத்தையும் சீரகத்தையும் வறுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, தினமும் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
 
மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, என மூன்றையும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments