Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பெற்றோர்கள் மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டியவை....!

பெற்றோர்கள் மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டியவை....!
குழந்தைகள் நலம்: உங்கள் குழந்தையும் நீங்கள் சொல்வதைக் காது கொடுத்து கேட்க சில வழிமுறைகளை கையாள்வதால், அவர்கள் ஆரோக்கியமாக வளர உதவியாக இருக்கும்.
நீங்கள் தினமும் உங்கள் குழந்தையுடன் நூற்றுக்கணக்கான வாக்கியங்களை பகிர்வீர்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் மழலைகள் மனதில் கொள்வதில்லை. உங்கள் அதிகப்படியான உணர்ச்சிகளும், கவனிப்பும், அறிவுரைகளும் குழந்தைகளை எளிதில் எரிச்சல் அடைய  செய்கின்றன.
 
குழந்தையை, நீ இப்படி இருக்க வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை திணிக்க கூடாது. அவர்கள்  போக்கில் வளர விடுங்கள்.
 
ஏதேனும் பயணங்கள் மேற்கொள்ளும் போது, நண்பர்களுடன் செல்லாதே, தனியே செல்லாதே, இப்பொழுது எங்கு இருக்கிறாய், என்று அடிக்கடி  போன் செய்து எரிச்சலுயூட்டுவதை விட்டு, “இலக்கை அடைந்ததும் தகவல் அனுப்பு” என்று கூறுங்கள்.
 
பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம், “இன்று நாள் எப்படி இருந்தது?” என்று அவர்களிடம் அன்பாக கேட்டு, அவர்தம் படிப்பு மற்றும் நட்பு  வட்டாரம் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.
 
எந்த ஒரு குழந்தையிடமும் நீ பாட்டு கற்றுக்கொள், நடனம் கற்றுக்கொள், ஓவியம் வரை என உங்கள் கருத்தை வலியுறுத்தாது,  குழந்தைகளிடம், “உனக்கு என்ன செய்ய பிடிக்கும்?” என்று கேட்டு அறிந்து, அதன் விருப்பத்தை நிறைவேற்றுவது நல்லது.
 
நடைமுறை வாழ்வில், உங்கள் குழந்தை தோல்வியைக் கண்டு பயமோ அல்லது சோர்வோ அடைந்தால், குழந்தைக்கு தைரியமூட்டி, கை  விடாதே! முயற்சி செய்! என்று நம்பிக்கை கொடுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதயத்தைப் பலப்படுத்தி சீராக இயங்க செய்யும் சீதாப்பழம்....!