Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக அளவில் வைட்டமின்கள் உள்ள பிஸ்தா !!

Webdunia
பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். 

ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும்.

தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம். வெள்ளை ரொட்டிடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியை தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர். 
 
பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின்கள் உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் இது, செல்களுக்கு தேவையான ஆக்சிஜனையும் கொடுக்கிறது.
 
பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டு வந்தால் நியாபகச் சக்தி அதிகரிக்கும்.
 
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.
 
பிஸ்தாவில் உள்ள சியாசாந்த், லூட்டின் ஆகிய இரு கரோட்டின்கள் காணப்படுகின்றன. இவை கண்ணின் விழித்திரையைப் பாதுகாத்து, தெளிவான பார்வைக்கு  வழிவகுக்கின்றன. மேலும் கண்புரை நோய் வராமல் காக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments