முள்ளங்கியில் இருவகை உண்டு. ஒன்று வெள்ளை முள்ளங்கி மற்றொன்று சிவப்பு முள்ளங்கி. இந்த இரண்டு வகைக் கீரைகளுமே சிறப்பான குணங்கள் பெற்றவை.
முள்ளங்கியின் இலை, தண்டுகள், விதை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை. முள்ளங்கிக் கிழங்கைவிட அதன் கீரையில்தான் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன.
சுண்ணாம்புச் சத்து முள்ளங்கி கீரையில் அதிகம் உள்ளது. இரும்புச் சத்து மற்றும் ஆக்கார்பிக் அமிலம் முதலியவை நிறைய உள்ளன.
புரதச் சத்துக் குறைவை நிவர்த்தி செய்வதற்கு இக்கீரை பயன்படுகிறது. உயிர்ச் சத்தான வைட்டமின் ஏ மற்ற கீரைகளில் உள்ளது அரிசி உணவு உண்பவர்களுக்கு இக்கீரை ஒரு மறு உணவாகவே அமையும்.
முள்ளங்கி கீரையில் மாவுச்சத்து, நார்ச்சத்து, புரோட்டீன், சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் A, B, C முதலியவையும் அதிகம் உள்ளன.
முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு பலம் சேர்க்கும். மேலும் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
6. முள்ளங்கிக் கீரையின் சாற்றை 5 அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.