முதுகுவலி வந்தாலே நம்மை எந்த வேலையையும் செய்ய முடியமால் முடக்கி விடுகின்றது. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். முதுகு வலிக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.
அதில் முக்கியமாக கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது. அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்டச் சத்துக்குறைவு, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது, உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படுகின்றது.
இதில் இருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
விளக்கெண்ணெய்யை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணெய்யில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.
புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.
சூடான நல்லெண்ணெய், உப்பு கொண்டு மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.
விளக்கெண்ணெய் ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.