Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ குணங்களை அள்ளித்தரும் வறுத்த பூண்டு !!

Webdunia
தினமும் 2 பூண்டினை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளை தரும். ஆனால் நிறைய பேருக்கு பூண்டினை பச்சையாக சாப்பிடுவது பிடிக்காது. அவர்களுக்கு தான் இந்த பதிவு.

பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள்  ஏற்படும்.
 
இரண்டு வழிகளில் பூண்டினை வறுத்து சாப்பிடலாம். பூண்டு பற்களின் தோலை உரித்து சுத்தம் செய்து பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து மணம் வரும் வரையும் வறுத்தும் சாப்பிடலாம்.
 
பூண்டு பற்களின் தோலினை உரிக்காமல் வெறும் பாத்திரத்தில் சேர்த்து தீயில் வைத்து மணம் வரும்வரை வறுத்தும் சாப்பிடலாம். 
 
வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது. உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
 
உடலில் உள்ள தமனிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது. பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
 
எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும். உடலில் உள்ள  செல்களின் வாழ்நாளை  நீட்டிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments