சேப்பங்கிழங்கு வழவழப்பு தன்மை கொண்டது. இந்த சேப்பங்கிழங்கில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
சேப்பங்கிழங்கில் அதிக அளவு கார்போ சத்து மற்றும் நார்சத்து உள்ளது. பச்சை சேப்பங்கிழங்கில் பத்து சதவீதம் சத்து உள்ளது.
இதயமானது ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தினை சீராக பாய்ச்சும். எனவே இதயம் ஆரோக்கியத்துடனும் வலுவாகவும் இருப்பதற்கு சேப்பங்கிழங்கு மிகவும் உதவுகிறது.
சேப்பங்கிழங்கு மாவில் அறுபத்தி ஏழு சதவிகிதம் உள்ளது. சேப்பங்கிழங்கில் நார்ச்சத்தானது பன்னிரண்டு சதவீதமாகவும், சேப்பங்கிழங்கு மாவில் முப்பத்தி ஒன்று சதவீதமாக உள்ளது.
சேப்பங்கிழங்கு ஜீரண உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கக்கூடிய கழிவுகளை மற்றும் நச்சுக்களை அனைத்தையும் நீக்கி சுத்தப்படுத்துகிறது.
சேப்பங்கிழங்கானது சிறந்த மலமிளக்கியாக திகழ்கிறது. இதில் மாவுச் சத்து ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றது. எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமானம் இன்மை பிரச்சனை முற்றிலும் குணமாகும்.