கண் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்கிற பழமொழி இன்னும் வழக்கத்தில் உள்ளது.
இலை, பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. எள்ளில் இருந்து வடிக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் எனப்படுகின்றது.
நல்லெண்ணெய்யில் போலேட் எனப்படும் கூட்டு வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் மக்னீசியச் சத்தும் நல்லெண்ணெயில் தேவைக்கு அதிகமான அளவிலேயே இருக்கின்றன. இந்த இரண்டு சத்துக்களும் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகக்கூடிய புற்றுநோய்களை தடுப்பதில் பேருதவி புரிகிறது. அதனுடன் கால்சியம் சத்தும் நல்லெண்ணெய்யில் அதிகமுள்ளது.
உணவிற்கான எண்ணெய்யாக நல்லெண்ணெய் பலவிதங்களில் பயன்படுகிறது. எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும்.
நல்லெண்ணெய்யில் காரமோ, கசப்போ, இனிப்போ, துவர்ப்போ எது கலந்தாலும் இனிய சுவை தரும். எண்ணெய்க் குளியலில் நல்லெண்ணெய் முக்கிய இடம் வகிக்கின்றது. நல்லெண்ணெய் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் சிறப்புக் கொண்டது.
நல்லெண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதயம் மற்றும் இதயம் தொடர்பான தசைகள், நரம்புகள் போன்றவற்றில் அதிகளவில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தடுத்து இதய பாதிப்பு உண்டாகாமல் காக்கிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த 5 கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொள்ளலாம். எள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தெளிவடையும்.
எள் எண்ணெய்யை 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும்.