Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நம் உணவில் தேவை அறுசுவை ஏன் தெரியுமா?

நம் உணவில் தேவை அறுசுவை ஏன் தெரியுமா?
நாம் சாப்பிட்ட உடன் உடலுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. அது நாம் சாப்பிடும் உணவில் சுவைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு பிராண சக்தி கிடைக்கிறது.  உணவில் உள்ள பொருட்கள் மூலமாக மீதி பிராண சக்தி கிடைக்கிறது.
புளிப்பு சுவை: புளிப்பு சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் அந்தச் சுவையை ஆகாயம் எனும் பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும்  அனுப்பும். இந்த சக்திக்கு கல்லீரல், கண்கள், பித்தப்பை இவை மூன்றும் வேலை செய்யும்.
 
புளிச்ச கீரை, இட்லி, எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்புச் சுவை அதிகம் உள்ளது.
 
உப்பு சுவை:  உவர்ப்பு சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அதை நீர்ப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும்.
 
கிரைத்தண்டு, வாழைத்தண்டு, முல்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை அதிகமாய் இருக்கின்றது.
 
கார சுவை:  கார சுவை நமது நாக்கில் பட்டதும் அவை காற்றுப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் பரவச் செய்கிறது. காற்றுப் பிராணன் மூலமாக வேலை  செய்யும் உறுப்புகள் நுரையீரல், பெருங்குடல், இதன் வெளி உறுப்பு மூக்கு. இதன் உணர்ச்சி துக்கம். மூக்குக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அதேபோல் நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
 
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
 
இனிப்பு சுவை: இனிப்பு சுவையை சாப்பிடும்போது அவை சுவை மொட்டுக்களால் மண் பிராணசக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்புகின்றன. மண் பிராணசக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இரப்பை, மண்ணீரல், உதடுகள் ஆகியவையாகும்.
 
பழவகைகள், உருளை, காரட், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை, கரும்பு போன்றவற்றில் இனிப்பு சுவை அதிகமாக உள்ளது.
 
கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை:  கசப்புக்கும், நெருப்புப் பிராணனுக்கும், இதயம், இதயத்தின் மேலுறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, நாக்கு ஆகிய  உறுப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்புண்டு.
 
பாகற்காய், கத்தரிக்காய், வெந்தயம், எள்ளு, பூண்டு, ஒமம் போன்றவை கசப்பு சுவையும், வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் ஆகியவை துவர்ப்பு சுவையும் மிகுந்து காணப்படும்.
 
நம் உடலில் கழிவின் தேக்கம் வியாதியாக மாறுகிறது. எனவே உணவே மருந்து என்பதை புரிந்துக்கொண்டு, உண்ணும் உணவு முறைகளை ஒழுங்பகுபடுத்துவதின் மூலமாக மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியமாகும். எனவே கழிவின் வெளியேற்றம் நோய் தீர்க்கும் வழி என்பதை அறிந்து  செயல்பட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி கொட்டுகிறதா? கருமை நிறம் வேண்டுமா?; கவலையை விடுங்க....!