Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல் நோய்களுக்கு விரைவில் குணம் தரும் இயற்கை மருத்துவம்!!

Webdunia
சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கை கொடுத்து உதவுகிறது. பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன உளைச்சலை உண்டாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். சரும நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். 
அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.
 
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பரங்கிச் சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியில் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு எடுத்து காலை, மாலை பசும் வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குறையும்.
 
குப்பைமேனி சொறி சிரங்குக்குக் கை கண்ட மருந்து. குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைத்து, அரிப்பு கண்ட இடத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஊறல், படை எல்லாம் ஓடிப்போய்விடும். இதனைக் காலை  நேரத்தில் பூசிக் குளித்தால் நல்லது.
 
வேப்பிலை ஒரு கைப்பிடி, 3 சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடம்பு முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தாலும் தோல்  சம்பந்தப்பட்ட வியாதிக்குக் குணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments