Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலவகையான மூலிகைகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும் !!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (16:46 IST)
நிலவேம்பு: இது காய்ச்சலை அகற்றி நல்ல பசியைக் கொடுக்கும். கடைகளில் விற்கும் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிநீராக்கி குடிக்க சகல சுரங்களும் தீரும்.


நிலாவாரை: நிலாவாரை இலைக்குடிநீரை சொறி, சிரங்கு, படை மீது தடவ அவை ஆறும். நிலாவாரை இலையைத் துவையலாய் அரைத்து இரவில் உண்ண மலசிக்கல் தீரும்.

நீர்பிரமி: இலையை வேக வைத்து அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும். இலையை அரைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும். இலைச் சாறுடன் நெய் சேர்த்து பதமாகக் காய்ச்சி 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை கொடுக்க சித்தபிரமை தீரும்.

நீர்முள்ளி: நீர்முள்ளி சமூலத்தை இடித்து 200 கிராம் அளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு ½ லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் தினம் 4 வேளை கொடுக்க ஊதிப்பெருத்த உடல் மெலியும். நீர்முள்ளி குடிநீரை குடித்து வர அனைத்து சிறுநீரக நோய்களும் குணமாகும்.

நுணா: குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் தீர நுணாச்சாறு 1 பங்கும், நொச்சி, பொடுதலை, உத்தாமணி ஆகிய மூன்றின் சாறு 1 பங்கும் கலந்து 3, 4 வேளை 50 துளிக் கணக்கில் 6 மாத குழந்தைக்கு கொடுக்கவும். 1 வயதுக்கும் மேல் 10-30 மி.லி. வரையும் கொடுக்கலாம். இலையை அரைத்துப் பற்றிட இடுப்புவ்லி தீரும்.

தூதுவளை: இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மார்புச் சளி நீங்கும். 10 கிராம் பூவை தினமும் காய்ச்சி பால், சர்க்கரை கூட்டி 40 நாட்கள் பருக உடல் பலம் பெறும்.

தொட்டால்சுருங்கி: இலையை அரைத்து பற்றுப் போட விரைவீக்கம், மூட்டு வலி, வீக்கம் ஆகியவை தீரும். இலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து அரை மணிநேரம் கழித்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர சிறுநீரகக் கற்கள் கரையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments