தானிய வகைகளில் வைட்டமின் C , A ஆகியவை இருப்பதால் நோய்த் தொற்று மற்றும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் வல்லமைப் பெற்றது. மேலும் அவை ஆன்டி ஆக்ஸிடண்ட் என்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தும்.
பொதுவாகவே தானியங்களில் உடல் ஆரோக்கியத்திற்கான நன்மைகள் அதிகம். அதுவே முளைக்கட்டிய பின் உண்டால் கூடுதல் நன்மை மற்றும் ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன.
முளைகட்டிய தானியங்கள் உணவு செரிமானத்தை தூண்டுகிறது. மேலும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கு ஏதுவான என்சைம்ஸ் சுரக்கிறது. மேலும் இது நார்ச்சத்து நிறைந்தது என்பதும் செரிமானத்திற்குக் கூடுதல் பலம்
இரத்த ஓட்டத்திற்கும் முளைக்கட்டிய தானியங்கள் உதவுகின்றன. இதில் அதிக அளவில் காப்பர் மற்றும் இரும்புச் சத்து உள்ளதால் இரத்த அணுக்களை அதிகரிக்கச்செய்யும். மேலும் ஆக்ஸிஜனை உறுப்புகளுக்கு செலுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு தானிய வகைகள் நல்ல பலன் தரும். பல வகைகளில் ஊட்டச்சத்துகளை உடலுக்குச் செலுத்துகிறது. மேலும் தானிய வகைகள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும் என்பதால் நீண்ட நேரத்திற்கு பசியைத் தூண்டும் ஹார்மோன்களை சுரக்கச் செய்யாது.