Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
திங்கள், 2 மே 2022 (16:35 IST)
பொதுவாக உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இதில் வாதத்தை கட்டுப்படுத்தி வைக்க முடக்கத்தான் கீரை மிகவும் உதவுகிறது.


நம் உடலில் உள்ள மூட்டுகள், எலும்பு, தசைகளின் வலிமையை வாதமே நிர்ணயிக்கிறது. முடக்கத்தான் வாத நோய்க்கு நிரந்தர தீர்வை தரும் என்பது முன்னோர்கள் கருத்து . அதன்படி இன்றும் முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வை நாம் பெறலாம்.

​மூட்டுகளில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு போன்றவை தான் மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது. இதனை கரைத்து சிறுநீரக வெளியேற்றினால் மூட்டுகளில் வலி குறையும். மூட்டுகளில் வலியை குறைக்க முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

முடக்கத்தான் கீரையின் இலையை மைய அரைத்து கால் முட்டியில் வீக்கம் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் வீக்கம் குறையும். ​மூட்டுகளில் இருக்கும் யூரிக் அமிலமும் படிப்படியாக குறைய தொடங்கும். மூட்டுகளில் வலி உணர்வு ஏற்பட்டால் தினமும் அருந்தும் டீ, காபி பானங்களை தவிர்த்து, ஒரு கப் முடக்கத்தான் சூப் குடிக்கலாம்.

முடக்கத்தான் இலையை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் இதை கலந்து குழைத்து, தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு இதை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி குறையும். மேலும் இது மூட்டுகளில் அதிகளவில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றும். மூட்டுகளுக்கு நடுவில் உருவாகும் ஜெல்லின் உற்பத்தியை அதிகரித்து எலும்புகளை வலிமையாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments