Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு தீர்வு தரும் கால்சியம் நிறைந்த பிரண்டை!

Webdunia
முழங்கால் வலி,மூட்டு வலி நீங்க பிரண்டை துவையல் செய்து சாப்பிடுங்கள்..கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை,  தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் சோர்வும் இருக்காது.

 
பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) தான். எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை. அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை. சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்.
 
பிரண்டை உப்பை சுமார் 300 மில்லி கிராம் தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள்  வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது. சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை  உடனடியாக உணரலாம்.
 
பிரண்டையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்தை உடைய இது, ஈறுகளில் ரத்தம் கசிவை சரிசெய்யும்.
 
பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால்  வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து. பிரண்டையின் மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments