கடுக்காய் காரத்தன்மை கொண்ட அமிலங்கள் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எப்பேர்ப்பட்ட நச்சுகளையும் போக்கும் சக்தி அதிகம் உள்ளது.
கடுக்காய் தூள் பொடியை வாரத்திற்கு ஒரு முறை இதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர, நமது உடலில் ஓடும் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தியாகும்.
நீரிழிவு பாதிப்பு கொண்டவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் அளவு கடுகை தூளை, வாயில் போட்டு கொண்டு சிறிது நீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்து, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும்.
ஒரு கடுக்காயை எடுத்துக்கொண்டு அதை சந்தனகட்டையை தேய்க்கும் கல்லில் விட்டு சில துளிகள் நீர் விட்டு தேய்த்த பின்பு கிடைக்கும் பசையை எடுத்து, தோலில் புண்கள் ஏற்பட்ட பகுதிகளில் விட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உடல் செல்களைப் புதுப்பித்து, உடலை வலுவாக்கி, இளமையாக இருக்கச் செய்யும். இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றில் கல்பங்கள் செய்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்; உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
கடுக்காய், கொட்டை பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் நன்கு பொடியாக்கி, அந்த பொடியை கொண்டு பற்களை துலக்கி வந்தால் பற்கள், ஈறுகள் சம்பந்தமான அணைத்து பிரச்னைகளும் நீங்கும்.