Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோயில் இருந்து பாதுகாக்க இந்த இலை பொடி போதும்!

Webdunia
முருங்கையின் காய்கள்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள் மற்றும் பழம் கூட சாப்பிட தகுந்ததாக உள்ளது. இந்த முருங்கை பொடி இன்று மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இது பல நாட்டு மருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முருங்கை உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்.
 
முருங்கையின் இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. இது புண்கள் மற்றும் இரத்தம்  வெளியேறுவதை வேகமாக குறைக்க உதவுகிறது.
 
முருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.
 
முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாகக்க உதவுகிறது. குறிப்பாக, நீரிழிவு, கார்டிவாஸ்குலர்  இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
 
முருங்கை இலையின் பொடியானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது அல்சைமர் நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உள்ள விட்டமின் இ மற்றும் விட்டமின் சி ஆனது, மன வளம், நியாபக திறன் ஆகியவற்றை பாதுகாக்க  உதவுகிறது.
 
முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை,  மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.
 
முருங்கையில் அதிகளவு விட்டமின்கள், மினரல் மற்றும் அமீனோ ஆசிட்கள் உள்ளன. இதில் போதுமான அளவு விட்டமின் ஏ,சி, மற்றும் இ உள்ளது. மேலும், இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் அடங்கியுள்ளது.
 
நீங்கள் முருங்கை இலை பவுடரை டீ ஆக குடிக்கலாம். இது மிக சுவையானதாக இருக்கும். இந்த பவுடரை தினமும் அரை அல்லது ஒரு  டீஸ்பூன் அளவிற்கு குடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments