Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் துத்தி இலை !!

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் துத்தி இலை !!
துத்திச் செடியின் வேரை நன்றாகக் கழுவி நீரில் ஒரு பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி பருகிவந்தால் உடலின் நரம்பு மண்டலம் பலமடையும்.துத்தி  வேருடன் மூக்கிரட்டை வேரையும் சேர்த்து காய்ச்சி சிறிது தேன் கலந்து பருகிவர சிறு நீரக கோளாறுகள் சுகமாகும்.
 

துத்தி இலையையும் வேலிப்பருத்தி இலையையும் சமஅளவில் எடுத்து அதனை சாறு பிழிந்து (200 மில்லி அளவுக்கு) அந்தச் சாற்றால் பல் கூச்சம், பல் வலி,  ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற துண்பங்களில் இருந்து விடுதலை பெறலாம்.
 
நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும், நீண்ட தூரம் பயணம் செய்வதாலும், புரோட்டா போன்ற துரித உணவுகளை உண்பதாலும் ஏற்படும்  மலச்சிக்கலுக்கும் இது அரு மருந்து. துத்தி இலையில் சூப் செய்தோ, இதன் சாற்றுடன் பால், தேன் கலந்தோ சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும்.
 
நாட்பட்ட வெளி மூலம் இதத்த மூலம் உள்ளவர்கள், துத்தி இலையை ஆமனக்கு எண்ணெய்யில் வதக்கி ஒரு வெற்றிலையில் வைத்து ஆசனவாயில் வைத்து  கட்டிக்கொண்டு வர நாட்பட்ட மூல வியாதி குணமாகும்.
 
அடுத்தது துத்தி பூ. இதை நிழலில் நன்றாக உலர்த்தி பொடியாக்கி அதனுடன், பாலும் பனங்கற்கண்டும் சேர்த்து பருகிவந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு,  காசநோய், இரத்த வாந்தி முதலியவை குணமாகும்.
 
துத்திக்காயில் உள்ள விதைகளை இடித்து பொடியாக்கி, அதனுடன் கற்கண்டும், தேனும் சேர்த்து சாப்பிட்டு வர வெண்மேகம், உடற்சூடு, கைகால்களில் படரும் சரும  நோய்கள், வெள்ளை படுதல் ஆகியவையும் குணமாகும்.
 
கடைசியாக முக்கியமான விஷயம், துத்திபூவை, காம்பு, மொக்குகளோடு சேர்த்து பறித்து அதை சிறிது கருப்பட்டி சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் ஆண்மை  பெருகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவை மிகுந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்ய !!