Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எலும்பு தேய்மானத்தை சரிசெய்ய பின்பற்றவேண்டிய இயற்கை மருத்துவ முறைகள்...!

எலும்பு தேய்மானத்தை சரிசெய்ய பின்பற்றவேண்டிய இயற்கை மருத்துவ முறைகள்...!
உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. வயது மற்றும் உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு, சரியான உணவு முறையை கடைபிடித்தால் எலும்பு தேய்மானத்தை சரிசெய்ய முடியும்.
எலும்பு தேய்மானம் சரியாக ஆல மர மொட்டுக்களை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர இடுப்பு மற்றும் எலும்பு வலிக்கு நிவாரணம்  அளிக்கும்.
 
எலும்பு தேய்மான பிரச்சனைக்கு வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு  தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
 
எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். மேலும் அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு அனைத்தையும் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டு  வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.
webdunia
அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.
 
வெந்தயக் கீரை, மாதுளை ஓடு, வில்வ ஓடு மூன்றையும் சம அளவில் எடுத்து காய வைத்து பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை, மாலை சாப்பிட்டால் எலும்பு தேய்மானத்தை குணப்படுத்திவிடலாம்.
 
அத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும். அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து  சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் உணவுவகைகள் என்ன...?