Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இரத்ததில் ஹூமோகுளோபின் அளவினை அதிகரிக்கும் வல்லாரை கீரை !!

இரத்ததில் ஹூமோகுளோபின் அளவினை அதிகரிக்கும் வல்லாரை கீரை !!
, சனி, 27 ஆகஸ்ட் 2022 (10:30 IST)
வல்லாரை கீரையில் இரும்புசத்து, சுண்ணாம்புசத்து,  தாதுஉப்புக்கள் உயிர்சத்து, விட்டமின் A,C அதிகம் உள்ளது. மூளைவளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் உதவுகிறது. மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மாத்திரைகள், பொடிகள், லேகியம் போன்ற வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டு, கடைகளில் சுலபமாக கிடைக்கிறது.


வல்லாரைகீரை இலைகளை பற்களின் மீது தேய்ப்பதால், மஞ்சள் கறை நீங்கி, பற்கள் மின்னும். பற்கள் ஈறுகள் வலுவடையும். வாய்புண் வாய்நாற்றம் நீங்க, வல்லாரை கீரை இலைகளை காலைவேளையில் மென்று தின்று வரலாம். படை போன்ற சருமநோய்கள் குணமாகும். முடி, தோல் நகம் நல்ல பொலிவினை பெறும்.

வல்லாரைகீரை இலைகளுடன் கல்கண்டு, பசும்பால், குங்குமப்பூ அரைத்து 96-நாட்கள் சாப்பிட்டுவந்தால், முகம் பளப்படையும். இளமைத் திரும்பும். இவ்வாறு சாப்பிடும் காலங்களில் மாமிசத்தை தவிர்த்துவிடுதல் நல்லது. யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையின் இலைகளை அரைத்து பற்று போல போட்டு வந்தால், கால் வீக்கம், நோயின் தாக்கம் குறையும். தொழுநோய் போன்ற கொடிய நோய்களையும் குணப்படுத்துகிறது.

இரத்தில் ஹூமோகுளோபின் அளவினை அதிகரிக்கிறது. இரத்தசோகை நோயை குணப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. ஆஸ்துமா, சளி இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோர் வல்லாரை இலைகளை தேனீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம். நல்ல பலனடைவீர்கள். பார்வைதிறனை அதிகரிக்கிறது. கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல்  போக்கி, கண் நரம்புகளை பலமடைச்செய்து பார்வை கோளாறுகளை சரி செய்கிறது. காய்ச்சல் இருமல், சளி குணமடைகிறது.

வல்லாரை இலையுடன் துளசி இலைகள், மிளகு சம அளவு எடுத்து, விழுதாக அரைத்து மாத்திரைகளாக சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குணமாகிவிடுவதோடு அல்லாமல் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். உடற்சோர்வு தொண்டைக்கட்டு இதனையும் சரிசெய்கிறது. மலச்சிக்கலை போக்கி, வயிற்றுப்புண் குடல் புண்ணை ஆற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா பாதிப்புகள்!